Author Topic: பப்பாளிப் பணியாரம்  (Read 418 times)

Offline kanmani

பப்பாளிப் பணியாரம்
« on: August 27, 2013, 11:04:30 PM »
   
பப்பாளிப் பணியாரம்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
பப்பாளிப்பழ விழுது - அரை கப்
துருவிய வெல்லம் - கால் கப்
பால் - ஒரு கப்
பாதாம், முந்திரித்துருவல் - கால் கப்
கிஸ்மிஸ் - சிறிதளவு


செய்முறை:

ரவையுடன் பப்பாளி விழுது, வெல்லம், பால், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்துக் கலந்து ஒருமணி நேரம் ஊற வைக்கவும். பின் இதை நன்றாகக் கலந்து கொள்ளவும். குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து ஒவ்வொழு குழியிலும் நெய் விட்டு கலவையைக் குழியில் பாதியளவு ஊற்றி, மிதமான தீயில் வேக விடவும். திருப்பிப் போட்டு, நெய் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறலாம்.