Author Topic: புற்றுநோயை விரட்டும் மாம்பழம்!  (Read 473 times)

Offline kanmani


பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.
ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த சுண்டெலிகளுக்கு மாங்காய் கொடுத்து ஆய்ந்த பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் அவைகளில் நிகழ்ந்ததை கண்டறிந்தனர். மாங்காய் / மாம்பழம் சாப்பிட்டபின் சுண்டெலிகளின் புற்றுநோய் பாதித்த கட்டி(Tumour)கள் பெருமளவில் குறையத் தொடங்கின.

பின்னர் நடத்திய ஆய்வில் மாங்காய் / மாம்பழத்தில் அடங்கியுள்ள லூபியோல்(Lupeol) என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்தனர். புற்றுநோய்க் கட்டிகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் லூபியோல் நிவாரணமாகும் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். லூபியோலில் அடங்கியுள்ள தனிப்பட்ட ரக விட்டமின்கள், ஆர்கானிக் அமிலங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்றவை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகின்றன.

வேதிச்சிகிச்சை (Chemotherapy), அறுவை சிகிச்சை (Surgery), கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) முதலான பல்வேறு சிகிச்சை முறைகள் புற்றுநோய்க்குப் பரிகாரமாக இருந்தாலும் நாட்டில் புற்றுநோயை அடியோடு இல்லாமல் ஆக்க அவைகளால் இயலாது என சந்தேகத்திற்கிடமின்றி தெளிந்து புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாங்காய் / மாம்பழத்தின் மூலம் நோய் குணமளிக்க இயலும் என்ற இப்புதிய கண்டுபிடிப்பு மருத்துவ நிபுணர்களுக்கு புத்துணர்ச்சியை நல்கியுள்ளது.