Author Topic: இட்லி வகைகள்  (Read 791 times)

Offline kanmani

இட்லி வகைகள்
« on: August 27, 2013, 10:28:50 AM »
பிளேட் இட்லி


பார்க்க கேக் போல இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய இட்லி இந்த பிளேட் இட்லி.

தேவையான பொருள்கள்:

உடைத்த கோதுமை - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்
கார அரிசி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சோடா - 1 சிட்டிகை
தயிர் - 1 கப்

செய்முறை:

* உடைத்த கோதுமை, உளுந்து, கார அரிசி மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

* அரைத்த மாவில் உப்பு, சோடா அல்லது தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

* குக்கரில் பருப்பு வேகவைக்கப் பயன்படுத்தும் தட்டில் மாவை அளவாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

* வெந்ததும் அரை வெளியில் எடுத்து கேக் போல சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.
« Last Edit: August 27, 2013, 10:31:49 AM by kanmani »

Offline kanmani

Re: இட்லி வகைகள்
« Reply #1 on: August 27, 2013, 10:29:38 AM »
லாலிபாப் இட்லி


பொதுவாக குழந்தைகள் பயறு வகைகளை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு இதுபோன்று வித்தியாசமாக லாலிபாப் இட்லி செய்து கொடுக்கலாம். நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள்:

அரிசி - 200 கிராம்
உளுந்து - 150 கிராம்
கொண்டைக் கடலை (அ) காராமணி - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து, அரைத்து இட்லி மாவு தயாரித்துக் கொள்ளுங்கள்.

* கொண்டைக் கடலையை உப்புப் போட்டு வேகவைத்து, இட்லி மாவில் கலந்து கொள்ளுங்கள்.

* சிறிய கப்களில் எண்ணெய் தடவி, மாவை அதில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

* இட்லி வெந்ததும் அவற்றைப் பதமாக வெளியில் எடுத்து, அதில் டூத்-பிக் குச்சியைச் செருகி பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: இட்லி வகைகள்
« Reply #2 on: August 27, 2013, 10:30:09 AM »
நூடுல்ஸ் இட்லி


தேவையான பொருள்கள்:

நூடுல்ஸ் - 1 பாக்கெட்
மக்காச் சோளமாவு - 50 கி
தண்ணீர் - 100 கி

செய்முறை:

* எப்போதும் செய்வதுபோல் நூடுல்ஸைத் தயாரித்து, அரைவேக்காடில் அடுப்பிலிருந்து இறக்கிவிடுங்கள். (செய்முறை தெரியாதவர்கள் நுடுல்ஸ் பேக்கெட் மீதுள்ள செய்முறைக் குறிப்பு பார்த்துச் செய்யலாம்)

* தண்ணீரில், மக்காச் சோளமாவைக் கலந்து கொண்டு, வேகவைத்த நூடுல்ஸை அதில் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளுங்கள்.

* இந்த மாவை இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுங்கள்.

Offline kanmani

Re: இட்லி வகைகள்
« Reply #3 on: August 27, 2013, 10:30:42 AM »
சில்லி இட்லி



வீட்டில் செய்த இட்லியோ அல்லது கடையில் வாங்கியதோ மீந்து விட்டால் அதை வீணாக்க வேண்டியதில்லை, சுவையான சில்லி இட்லியாக மாற்றிவிடலாம்.

தேவையான பொருட்கள்:

இட்லி : 5
ரெட் சில்லி பவுடர் : 1/4 ஸ்பூன்
சில்லி சாஸ் : சிறிது
வெங்காயம் : 2 ( மீடியல் சைஸ் )
தக்களி : 1 சிறியது
மசாலா தூள் : 1 ஸ்பூன் ( இறைச்சி, அல்லது மீன் )
தாளிக்க : சோம்பு சிறிது

செய்முறை:

1 வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெங்கஅயாம் போட்டு தாளித்து நன்கு வதக்கவும்...

2. தக்களியும் சேர்த்து வதக்கி அதனுடன் மற்ற பொருகளையும் சேர்த்து ( இட்லி தவிர) நன்கு வதக்கவும்....

3. 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் சுண்டும் நேரம் இட்லியை நீள வாக்கில் மெலிசாக வெட்டி அதில் போட்டு கிளரவும்...

4. 5 நிமிடம் அப்படியே கிளரி இறக்கவும்...

5. மல்லி தளை சேர்த்து இறக்கவும்...

Offline kanmani

Re: இட்லி வகைகள்
« Reply #4 on: August 27, 2013, 10:31:10 AM »
ஸ்டஃப்டு இட்லி


தேவையான பொருள்கள்:

அரிசி - 200 கிராம்
உளுந்து - 150 கிராம்
வெந்தயம் - 1 பிடி
கேரட், முட்டைகோஸ், வெள்ளரி - இரண்டு கப்
மிளகு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து இட்லி மாவு தயாரித்துக் கொள்ளுங்கள்.

* கேரட், முட்டைக் கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நீளவாக்கில் அரிந்து, அதில் உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அதன் மேல் எலுமிச்சைப் சாறு பிழிந்து விடுங்கள்.

* இப்போது கரைத்து வைத்துள்ள இட்லி மாவை இட்லித் தட்டில் ஒரு லேயர் ஊற்றிக்கொண்டு, அதன் மேல் கலந்து வைத்திருக்கிற காய்கறிகளைப் போடுங்கள்.

* மீண்டும் ஒருமுறை காய்கறிகளின் மேல் மாவைக் கொஞ்சமாக ஊற்றி, வேகவைத்து எடுங்கள்.

ஸ்டஃப்டு இட்லி தயார்!