கோவக்காய் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்
கார்ன் ப்ளார் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம்
எலுமிச்சைச்சாறு [அ] வினிகர் - அரை தேக்கரண்டி
கோவக்காயை நீளவாக்கில் நான்காக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறி 10 நிமிடம் வைத்து பிழிந்து எடுத்து விடவும்.
அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள், கார்ன் ப்ளார், வினிகர் விட்டு பிசறி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிது சிறிதாக போட்டு முறுகலாக வறுத்து எடுக்கவும்.