கோவக்காய் - 10
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
புளி - கொட்டை பாக்களவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - ஐந்து
தனியா - ஒரு மேசைக்கரண்டி
அரிசி - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு பல்
மல்லி தழை - சிறிதளவு
வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஒரு தட்டில் ஆறவைக்கவும்.
ஆறியதும் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் கோவக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.
காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான கோவக்காய் புளிக்குழம்பு தயார்.