Author Topic: மைதாமாவு (கோதுமைமாவு ) அவிப்பது எப்படி?  (Read 435 times)

Offline kanmani


    மைதாமாவு  (கோதுமைமாவு ) - 1 கிலோ
    தண்ணீர் - தேவையானளவு

 

    ஒரு அரிதட்டினால் மைதாமாவை (கோதுமைமாவை) பூச்சி புழுக்கள் இல்லாதவாறு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போடவும்.
    அதன் பின்னர் ஸ்டீமரின் கீழ்பகுதியை அல்லது ஒரு பானையை எடுத்து அதில் முக்கால் பகுதி தண்ணீரை விட்டு அதனை அடுப்பில் வைக்கவும்
    அதன் பின்னர் அதன் மேல் ஸ்டிமரின் மேற்பகுதி அல்லது நீத்துபெட்டிய வைக்கவும்
    அதன் பின்னர் ஸ்டீமரினை வைத்தால் அதனுள் சுத்தமான மெல்லிய பருத்தி வெள்ளைத்துணி ஒன்றை விரித்து வைக்கவும் ஆனால் நீத்து பெட்டியில் மாவை போடுவதானால் இது தேவை இல்லை
    அதன் பின்னர் அதில் அரித்த(சலித்த) மாவை போட்டு ஒரு மூடியினாள் மூடவும்
    அதன் பின்னர் அடுப்பை போட்டு மாவை (1 - 1.30) மணித்தியாலம் அவியவிடவும்.
    மா அவித்ததும் அதனை அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
    அதன் பின்னர் அதனை ஓரளவு சூட்டுடன் 3 தடவைஅரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
    மாவில் உள்ள சூடு ஆறியதும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.
    பின்பு அவித்த மாவு  தேவைப்படும் போது இதனை பாவிக்கலாம்.

Note:

புட்டு,இடியப்பம் அவிப்பத்திற்கும் அல்லது தோசை சுடுவதிற்கும் கொழுக்கட்டை செய்வதிற்கும் இந்த மாவை பயன்படுத்தலாம்