Author Topic: இஞ்சி தேங்காய் சாதம்  (Read 757 times)

Offline kanmani

இஞ்சி தேங்காய் சாதம்
« on: August 23, 2013, 10:39:45 PM »
தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகு தூள் - தேவையான அளவு
துளசி - 6 இலைகள்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பேனில் வெண்ணெயை போட்டு, இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் அரிசி, தேங்காய் பால், 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தண்ணீர் முழுவதும் வற்றி, சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் ரெடியாக இருக்கும்.