Author Topic: பூசணிக்காய் ரெய்த்தா  (Read 428 times)

Offline kanmani

பூசணிக்காய் ரெய்த்தா
« on: August 22, 2013, 11:16:26 AM »
என்னென்ன தேவை?

வெள்ளைப் பூசணிக்காய் துருவல் - 100 கிராம்,
மாங்காய் துருவல் - 25 கிராம்,
வெள்ளரிக்காய் துருவல் - 100 கிராம்,
கொழுப்பு நீக்கிய தயிர் - 100 மி.லி.,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் - தாளிக்க.
எப்படிச் செய்வது?

பூசணி, மாங்காய், வெள்ளரித் துருவலை தயிரில் சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துக் கலந்து அப்படியே பரிமாறவும்.
பூசணிக்காயிலும், வெள்ளரிக்காயிலும் இயற்கையிலேயே உப்புச் சுவை இருப்பதால், இதற்கு தனியே உப்பு தேவையில்லை. மாங்காயின் புளிப்பு  இன்னும் சுவை சேர்க்கும்.