கதவை திறந்தேன்
காலை சூரியன் நாலுகால் பாய்சலில்
அறையெங்கும் ஆக்கிரமிக்க
அதுவரை அமைதியாக
துயில் கொண்டிருந்த இருள்
மடித்து சுருட்டிக்கொண்டு
பயந்து பீரோவுக்கு பின்னால் பதுங்கியது
எனக்கு அதன் மேல்
பகை ஒண்ணுமில்லை
வெளிச்சத்துக்கு
அப்படி என்ன தான் பகை
இந்த இருளின் மீது
அது அப்படி யென்ன
பாதகம் செய்து விட்டது
இருள்
அமைதியின் ஸ்பரிசம்
நிம்மதியின் முகம்
ஓய்வின் படுக்கை
இருளில்
எல்லா கட்சிக் கொடிகளும்
கருப்பாகவே தெரிகின்றன
எல்லோர் முகங்களும்
பேதங்கள் அற்ற ஒரே முகங்களாகவே தெரிகின்றன
அதனனல்
நம் நாட்டுக்கு இப்போது தேவை
இருள் மட்டும் தான்