வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
கருவேப்பிலை - 5 இலை
நல்லெண்ணெய் - 3 மேஜை கரண்டி
கடுகு - 1/2 தே கரண்டி
வெந்தயம் - 1/2 தே கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே கரண்டி
தனியா தூள் - 1/2 தே கரண்டி
உப்பு - 2 தே கரண்டி
கரைத்து கொள்ள :
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் - 4 கப்
வறுத்து அரைக்க வேண்டிய பொருள் :
கடுகு - 1/2 தே கரண்டி
வெந்தயம் - 1/2 தே கரண்டி
மிளகு - 1 தே கரண்டி
சீரகம் - 1 தே கரண்டி
துவரம் பருப்பு - 2 தே கரண்டி
செய்முறை :
வெங்காயம், தக்காளியினை பொடியாக வெட்டிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் கடுகு வெந்தயம் போடு தாளித்து பூண்டு போட்டு வதக்கவும்.
இத்துடன் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்துள்ள புளி கரைசலில் பொடி செய்துள்ள வறுத்த பொடி மற்றும் கொடுத்துள்ள தூள் வகைகளை சேர்த்து நன்றாக கரைக்கவும்.
இப்பொழுது கரைத்த புளி கரைசலினை கடாயில் உள்ள வதக்கிய பொருட்களுடன் சேர்த்து நன்றாக 10 -15 நிமிடம் கொதிக்கவிடவும்.
இப்பொழுது சுவையான மிளகு குழம்பு ரெடி