சமோசா தாள் (சிறியது) - ஒரு பாக்கெட்
வேக வைத்த கோழி - 50 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
துருவிய கேரட் - 2
துருவிய கோஸ் - சிறிது
பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
ஃப்ரீசரிலிருந்து சமோசா தாளை வெளியே எடுத்து வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் ஒன்றன்பின் ஒன்றாக கோஸ், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, மசித்த உருளைக்கிழங்கு, மல்லித் தழை, உப்பு மற்றும் வேக வைத்த கோழிக் கலவை சேர்த்து பூரணம் போல் பிரட்டி வைக்கவும்.
சமோசா தாளின் ஓரத்தில் சிறிது பூரணம் வைத்து இருபுறமும் மடிக்கவும். ஓரத்தில் சிறிது மைதாவை குழைத்து தடவி ஒட்டி அப்படியே ரோல் செய்யவும்.
இதேபோல் தேவைக்கேற்ப ரோல்களை தயார் செய்து, வாணலியில் எண்ணெயை சூடாக்கி ரோல்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான ஸ்டிக் ரோல்ஸ் ரெடி.
ரோல்களை தயார் செய்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது எடுத்து 10 நிமிடங்கள் வெளியில் வைத்திருந்து, பின் ரோல்களை பொரித்து பரிமாறலாம். சமோசா தாள் கிடைக்கவில்லையெனில் மாவை சப்பாத்தி போல் போட்டு ரோல்களாக செய்து கொள்ளவும்.