Author Topic: சௌசௌ பொரியல்  (Read 611 times)

Offline kanmani

சௌசௌ பொரியல்
« on: August 21, 2013, 11:51:21 AM »


    சௌசௌ - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 3 பல்
    தேங்காய் துருவல் - கால் கப்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    தாளிக்க:
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    வரமிளகாய் - 3
    கறிவேப்பிலை

 

 
   

சௌசௌ, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
   

வெங்காயம் நிறம் மாறியதும், சௌசௌ, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).
   

சௌசௌ வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
   

எளிமையான, சுவையான சௌசௌ பொரியல் தயார்.

 

சௌசௌ இரத்த அழுத்தத்திற்கு நல்ல மருந்து. வாரத்திற்கொரு முறை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.