சுத்தம் செய்யப்பட்ட இறாலை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் வெந்த இறாலை நன்றாகப் பிசையவும். அத்துடன் சிறிதளவு மைதா, கரம் மசாலாத்தூள், உப்பு, வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறிய உருண்டை பிடித்து வடை போல தட்டிக் கொள்ளவும். பின்னர் அதனை ரொட்டித் தூளில் பிரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் வார்த்து வேகவைத்து எடுக்கவும். இது இறால் கட்லட். சாப்பிட சுவையாக இருப்பதுடன் கால்சியம் சத்தும் நிறையக் கிடைக்கும். இறால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் கூட இந்தக் கட்லட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.