என்னென்ன தேவை?
மீன் கிலோ-1/2
நறுக்கிய தக்காளி- 4
பெரிய வெங்காயம்- 3
பூண்டு -7 பல்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
மிளகாய் 5
மிளகாய் தூள் -ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை பழம்- அரை மூடி
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - கால் கப்
எப்படி செய்வது?
மீனை நன்கு கழுகி சுத்தம் செய்து மீனின் நடுப்பகுதியில் கீறக்கொள்ளவும். மீனை மஞ்சள், மிளகாய்தூள் சேர்த்து நன்கு பிரட்டி பத்து நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். மிளகாய், 2 வெங்காயம், 2 தக்காளி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள 1 வெங்காயத்தையும் தக்காளியையும் நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீன்துண்டுகளை பொரித்து எடுக்கவும். பொரித்த மீன்களை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், அரைத்த மிளகாய், தக்காளியை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் தண்ணீர் ஊற்றி கிளறி பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு பிரட்டவும். மிதவேகத்தில் அடுப்பை எரியவிட்டு மூடி விடவும். ஒரு சில நிமிடம் கழித்து எலுமிச்சை பிழிந்துவிட்டு உப்பு தேவையான அளவு இருக்கிறதா என சரிபார்த்து இறக்கி பரிமாறவும்