என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 1,
காலிஃப்ளவர் - சில துண்டுகள்,
கேரட் - 2, பச்சைப் பட்டாணி - அரை கப்,
முட்டை கோஸ் - 1 துண்டு,
பீன்ஸ் - 10,
தேவைக்கு - உப்பு,
வெண்ணெய், மைதாமாவு - 1 டேபிள்ஸ்பூன்,
பால் - அரை கப்,
விருப்பப்பட்டால் சீஸ் துருவியது - 1 துண்டு, மிளகுத்தூள் சிறிது.
எப்படிச் செய்வது?
காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனையும் பச்சைப் பட்டாணியையும் சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், மைதா, உப்பு, மிளகுத்தூள், வெண்ணெயை சேர்த்து மிதமான தீயில் கிளறி இறக்கி, வெந்த காய்கறி கலவையில் சேர்த்து, ஒரு பேக்கிங் பாத்திரத்தில் சமமாக பரப்பி அதன் மேல் சீஸ் தூவி பேக் செய்து எடுக்கவும். சீஸ் பிடிக்காதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.