Author Topic: காதல் டைரி  (Read 411 times)

Offline தமிழன்

காதல் டைரி
« on: August 19, 2013, 07:03:20 PM »
நீ என்ன சொன்னாலும்
தலையாட்டியபடி கேட்டுக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே
உன் ஜிமிக்கிகளும்


மகிழ்ச்சியால் திக்குமுக்காடியபடி
சிரித்து சிரித்து நுரை தள்ளிய படி
தலைகால் தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
எங்கள் ஊர் வழியாக
நீ குளிக்கும் ஆறு





Offline kanmani

Re: காதல் டைரி
« Reply #1 on: August 24, 2013, 11:08:02 PM »
brother unga diaryla inum idhupola ethanai kavidhaigal iruko ellam eduthu vidunga :D