Author Topic: ~ வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:- ~  (Read 435 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226403
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-




வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும்புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமின் ஏ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை, பாலியல் உறுப்புகள் பிரச்னை என நிறைய பாதிப்புகள் மனிதனைத் தாக்க காத்திருக்கின்றன.

இந்தப் பிரச்னைகளை தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்தினை உட்கொள்ளுவதன் மூலம் விரட்ட முடியும். எப்படி? வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கும் பால், முட்டை, மஞ்சள் கரு, வெண்ணெய், மாம்பழம், பப்பாளிப்பழம், பேரிக்காய், பலாப்பழம், ஆரஞ்சு, தக்காளிப்பழம், பச்சை கேரட் ஆகியவற்றை உண்டாலே போதும். இவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது.

சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளு பவர்கள் இனி கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது. ஆமாம் சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தால் போதும் 25 மில்லி கிராம் வைட்டமின் சி யை சிகரெட் எடுத்துக் கொள்கிறது. தினமும் உணவில் அதிகமாகப் புரதச் சத்து உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்பவர்கள் வைட்டமின் சி யையும் அதிகம் சேர்க்க வேண்டும். புரதச்சத்து உடலில் அதிகரிக்கும்போது வைட்டமின் சி தேவையும் அதிகரிக்கிறது.

அதற்குத் தகுந்தாற்போல் வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளைச் சேர்கக வேண்டும். வைட்டமின் சி குறைவால் உள்காயங்கள், பலவீனமான எலும்பு, பல், ஈறு நோய்கள், சோம்பேறித்தனம், களைப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். சராசரியாக ஒவ்வொரு வருக்கும் தினம் 400 மில்லி கிராம் வைட்டமின் சி தேவை. இது கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளிப் பழம், சாத்துக்குடி, தக்காளி, முட்டைக்கோசு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது.

நாம் அதிகம் கவலைப் படாத ஒரு வைட்டமின் என்றால் நிச்சயம் அது வைட்டமின் ஈ-யாகத்தான் இருக்கும். உண்மை யில் வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும். இந்து இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுவாக்குகிறது.
வைட்டமின் ஈ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். ரத்தம் உறையாமை நோய் உள்ளவர்கள் வைட்டமின் ஈ உணவு வகைகளை அதிகம் சேர்க்கக் கூடாது. அப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. பட்டாணிக்கடலை, கோதுமை, ரவா, புழுங்கலரிசி, முட்டை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.