Author Topic: ~ விஷ்ணுக் காந்தி செடியின் மருத்துவ குணங்கள்;- ~  (Read 707 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விஷ்ணுக் காந்தி செடியின் மருத்துவ குணங்கள்;-




இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி, வட்டமான சில மலர்களை உடையது. பொதுவாக நீலநிறமாகவும், அரிதாக வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படும். விஷ்ணுக் கிரந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது. செடிகள் முழுவதும் மருத்துவக் குணமுடையது.

மருத்துவக் குணங்கள்:

விஷ்ணுக் காந்தி நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், கோழையகற்றியாகவும், வியர்வை பெருக்கியாகவும், தாது பலமூட்டியாகவும் செயல்படுகிறது.

விஷ்ணுக் காந்தி சமூலம் 5 கிராம் எடுத்து பால்விட்டு நெகிழ அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி மூன்று வேளையும் கொடுத்து வந்தால் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாதம், பித்தம் தொடர்பான நோய்கள் அனைத்தும் குறையும்.

விஷ்ணுக் காந்தி சமூலத்தை விழுதாக அரைத்து நெல்லிக்காயளவு ஓரிரு மண்டலம் உட்கொண்டு வந்தால் கண்டமாலை நோய் குறையும்.

விஷ்ணுக் காந்தியை கொட்டைப் பாக்களவு அரைத்து எடுத்து தயிரில் கலந்து கொடுத்து வந்தால் இரத்தபேதி, சீதபேதி குறையும். காரம், புளி நீக்க வேண்டும்.

விஷ்ணுக்காந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி சமன் அரைத்துப் பாக்கு அளவு காலை, மதியம், இரவு உணவுக்கு முன் உண்டு பால் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி, இந்திரிய ஒழுக்கு, மறதி, வெட்டைச்சூடு தணிந்து உடல்பலம் உண்டாகும்.

விஷ்ணுக்காந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரைத்தேக்கரண்டி சீரகமும் சேர்த்து நெகிழ அரைத்து கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்