Author Topic: ~ முளைக்கீரையின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 540 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226403
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முளைக்கீரையின் மருத்துவ குணங்கள்:-




*நாம் உண்ணும் உணவில் கீரை சேர்த்து கொண்டு சாப்பிடடால் நோயின்றி வாழமுடியும்.
தண்டுகீரையின் இளஞ்செடியே முளைக்கீரை ஆகும்

*இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.கால்சியம் சத்துகள் நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.

வலுவடையும் எலும்புகள்

*முளைகீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம்.இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.வளரும் குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது முதியோர்களுக்கு இதை கண்டிபாக தரவேண்டும்.நரம்புகளுக்கும்எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்

பறந்தோடும் மாலைகண் நோய்

*முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 / மிஹி ( அகில உலக அலகு ) வைட்டமின் உள்ளது. இது மாலைக்கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

*முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும்.

*இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும்.