கடலைப்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
தாளிக்க:
பட்டை - 2
லவங்கம் - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கடலைப்பருப்பை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்து கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
கார சாரமான சென்னை ஸ்பெஷல் வடை கறி தயார்.