விரும்பிய மீன் துண்டுகள் - 4
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தட்டிய பூண்டு - 6
வெண்ணெய் - சிறிது
சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிது
தக்காளி ஃப்ளேக்ஸ் - சிறிது
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
தேன் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு
பெப்பர் - தேவைக்கு
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். மீன் துண்டுகளைக் கழுவிக் கொள்ளவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து மீன் துண்டுகளுடன் சேர்த்துப் பிரட்டவும்
அவனை 400 டிகிரிக்கு முற்சூடு செய்து மீன் துண்டுகளை ட்ரேயில் வைத்து பேக் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மீன் நன்கு வெந்ததும் ப்ராயிலில் 2 நிமிடங்கள் வைத்து வெளியே எடுக்கவும்.
ஹெல்தியான ஃபிஷ் ஃப்ரை ரெடி.