Author Topic: ~ மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள் ~  (Read 884 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்

வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்கு தான். பணம் சம்பாதிப்பது நம் தேவைக்காக, பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே மன அழுத்தமும் வந்து சேர்கிறது. இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலா தனிமம் ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது.

நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.



புத்தகம் படிப்பது



புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
யோகாசனம்



தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் போது, மனமானது சாந்தமாகி பின் அமைதி அடையும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசையை கேட்பது



கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு ரசிப்பதே. வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தோட்டக்கலை



தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சமைப்பது



சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து, மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.
« Last Edit: August 16, 2013, 03:04:31 PM by MysteRy »

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எழுதுவது



மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணிப்பொறி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும். இது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுவதால், மன பாரம் குறையும். ஆதலால் மனம் விரும்பும் பொழுதுப்போக்கை தேர்ந்தெடுத்து, மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியுடன் இருங்கள்.