Author Topic: நான் கண்ணீர் சிந்திய வரிகள்.....  (Read 810 times)

Arul

  • Guest
வயதான கடிதம்

அன்புள்ள மகனே
நலமா?
அன்று உன் விரல்பிடித்து
நடக்கச் செய்த
அதே ஸ்பரிசத்தோடு
இன்று பேனாப் பிடித்து
எழுதுகிறேன்

இந்த கடிதத்தை
உன் மகனுக்குத் தெரியாமல் படி
நீயும் பிற்காலத்தில் இப்படி எழுதாமலிருக்க.....

உன்னை சபிப்பதோ
என் துயரங்களை சொல்வதோ
இந்த கடித்ததின் நோக்கமல்ல
உன் தாய் என்று கூட
பாரபட்சம் பார்க்காமல்
என் கடைசி ஆசையை
தெரிவிப்பதே...

நான் இறந்த பிறகு கொல்லியை
தலையில் வைக்காதே
வயிற்றில் வை....

என் உடலிலே
முதலிலே எரியப்போகும் உறுப்பு
உன்னை சுமந்த கருப்பையாகத் தான் இருக்கவேண்டும்...
நீ பால்வார்க்க
கொடுத்து வைக்காத வயிறு
அஸ்தியாவது கொடுக்கட்டும்...

இந்த கடிதம் எழுதுகிறபோது
கையில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது
ஒன்றுமில்லை
கடந்த ஐந்து ஆண்டுகளாக கொதித்த
கண்ணீர் துளி ஒன்று
கை மீது சிந்திவிட்டது
அதுவே காரணம்...

மகனே...பெத்தமனம் பித்து
என்பதற்கு சான்றாய்
என் கடைசி வரி....

உன் வீட்டு உணவு தான்
எனக்கில்லை என்றாகிவிட்டது
ஒரு வேளை நீ இந்த கடிதத்திற்கு
பதில் போட்டால்
தபால் தலையை எச்சிலால் அல்ல
ஒரே...ஒரு....சோற்று பருக்கையால்
ஒட்டி அனுப்பு.....

இப்படிக்கு
ஒரு வயதான குழந்தை
கடந்த

நன்றி சேஷாத்ரி

இது நான் எழுதியது அல்ல..............

Offline Yousuf

மனதை நெகிழச்செய்யும் கவிதை அருள்!

உண்மையில் பெற்றோர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு இக்கவிதை ஒரு படிப்பினை!

எழுதியவருக்கும் அதை எங்கள் பார்வைக்கு தந்த உங்களுக்கு நன்றிகள்!

தொடரட்டும் உங்கள் கவிதைகள்!

Arul

  • Guest
மிக்க நன்றி YOUSUF

 எனக்கு இவர்களைப் போல் உள்ள பெரியவங்களை ரொம்ப பிடிக்கும்
அவங்களோடு பேசவும் ரொம்ப பிடிக்கும் நாம என்ன தான் படிச்சி
பெரிய விஞ்ஞான வளர்ச்சியில் வாழ்ந்தாலும் இவங்களோட
பாசத்துக்கு முன்னாடி இதெல்லாம் எதுவுமில்லை
அவங்களும் குழந்தைகளை போலத் தான் அந்த பிடிவாதம்
இன்னும் சில விசயங்கள் இருக்கத் தான் செய்யும் ஆன சொன்ன புரிஞ்சுக்குவங்க........இவங்க வாழ்க்கையின் அனுபவ பொக்கிசங்கள்..............

Offline micro diary

என் உடலிலே
முதலிலே எரியப்போகும் உறுப்பு
உன்னை சுமந்த கருப்பையாகத் தான் இருக்கவேண்டும்...
நீ பால்வார்க்க
கொடுத்து வைக்காத வயிறு
அஸ்தியாவது கொடுக்கட்டும்...


unmaiya varigal arul  ezhinavaruku vazhthu soluga antha thaai evlo nonthu poyi iruntha epdi soli irupanganu ninaichave kashtama iruku

Offline Yousuf

முற்றிலும் உண்மைதான் அருள்!

பெரியவர்களை பற்றி நாம் பேசும்போது எனக்கு ஒரு நபி மொழி நினவு வந்தது. இதோ அந்த நபி மொழி...

‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).

Arul

  • Guest
ஆமாம் Micro

நீங்கள் சொல்வது போல தன் உண்மை மன உணர்வை அப்படியே வெளியிட்டிருகிறார் மிக அருமையான வரிகள்

கட்டாயம் இதை எழுதிய அவருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன் என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் நம் FTC சார்பாகவும்..........

Arul

  • Guest
ஆமாம் YOUSUF

(‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’)

மிருகங்களாக மாறிவிட்டது நம் சமூகம்

வயது முதிர்ந்து அழகு குறையும் போது எல்லோராலும் மறை முகமாக ஒதுக்கப்படவே செய்கிறார்கள். அந்த உடல் அழகுக்கு கொடுக்கும் மதிப்பை உள்ளங்களுக்கு கொடுக்க ஏனோ மறுத்து விடுகிறது நம் சமூகம்
அனைத்து மதங்களுமே நல்ல வழி முறைகளையே சொல்லிக் கொடுக்கின்றன ஆனா இதை புரிந்து கொள்ளும் நிலையில் தான் நாம் இல்லை என்பது வேதனைக்குரிய விசயம் தான்