Author Topic: ஆம் பன்னா  (Read 396 times)

Offline kanmani

ஆம் பன்னா
« on: August 14, 2013, 10:40:39 PM »
என்னென்ன தேவை?

மாங்காய் - 1,
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சை ஃபுட் கலர் - 1 சிட்டிகை,
சீரகத் தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மாங்காயை பிரஷர் குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தோலையும் கொட்டையையும் நீக்கி, சதைப் பற்றைத் தனியே எடுக்கவும்.  அத்துடன் சர்க்கரை, சீரகத் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். கடைசியாக கலர் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இந்தக் கலவையில் 2  டேபிள்ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீரில் கலந்து பரிமாறவும். கலவையை 1 வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.