Author Topic: ~ கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ் (chicken wings) ~  (Read 440 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ் (chicken wings)




chickn wingsசிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது.
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், நகர்புறத்தில் எளிதில் கிடைக்கும் என்பதாலும் மக்கள் இதை சாப்பிடுகின்றனர். ஆனால் ப்ராய்லர் கோழியில் உள்ள தீமைகளை பலர் அறிய வாய்ப்பு இல்லை.

பெரும்பாலானோர் கோழியின் இறக்கையைத் (chicken wings) தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கன் விங்ஸ் உடலில் பல அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கட்டியை நீக்கினாலும் எதிர்காலத்தில் கர்ப்ப பையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். ப்ராய்லர் கோழியானது வெறும் 65 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து விடுகிறது. இதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு ஸ்டெராய்டு (Steroids) என்னும் ஊக்கமருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

மேலும் இந்த ஊசியானது கோழியின் கழுத்து மற்றும் இறக்கை பகுதிகளில் செலுத்தப்படுகிறது. ஆதலால் ஸ்டெராய்டு என்னும் ஊக்கமருந்தின் தாக்கம் கழுத்து மற்றும் இறக்கைகளில் அதிகமாக இருக்கும்.

எனவே சிக்கனில் கழுத்து மற்றும் இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும். எனவே ப்ராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்த்து நாட்டு கோழி சாப்பிடுவதே நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.