Author Topic: ~ மன அழுத்தத்தை நீக்க ~  (Read 814 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மன அழுத்தத்தை நீக்க ~
« on: August 13, 2013, 11:54:38 AM »
மன அழுத்தத்தை நீக்க

எப்போதும் நமக்கு தெரியாமல் நம்மை வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஒரு உயிர் கொல்லி. என்னங்க, அது என்னனு தெரியலையா? அது தான் மன அழுத்தம். மன அழுத்தம் நம்மை பல வழிகளில் தாக்கும். அதில் நடு ராத்திரியில் நடுங்க வைத்து தூக்கத்தை கெடுக்கும் அல்லது முக்கியமான வேலைக்கு நடுவில் அப்படியே உறைய வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த அழுத்தத்தை நீக்க பல மருந்து மாத்திரைகள் உள்ளது. இருப்பினும் இயற்கையான முறையில் அழுத்தத்தை நீக்க சில வழிகள் உள்ளது. இந்த வில்லங்கமான மன அழுத்தத்தை போக்க உங்களுக்காக நாங்கள் சில கவர்ச்சிகரமான 10 வழிகளை பட்டியலிட்டுள்ளோம். அவைகளை பின்பற்றி, மன அழுத்தத்தை நீக்கி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடுங்கள்.



தண்ணீர் பருக ஏற்படும் சோம்பேறி தனத்தை நீக்கிடுங்கள்



அடிக்கடி தலைவலி, எரிச்சல், குறைச்சலான எதிர் வினை, சோம்பல் மற்றும் களைப்பு ஏற்படுகிறதா? அதற்கு உடல் வறட்சியைக் காரணம் காட்டலாம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது கையில் கிடைத்த பொருளை தூக்கி எறிய வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் உண்மையிலேயே இதற்கு தேவைப்படுவது தண்ணீர் தான். மதுபானம் பருகினால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடல் வறட்சியை அதிகரிக்கவே செய்யும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #1 on: August 13, 2013, 07:33:23 PM »
பாலுடன் முக்கிய சந்திப்பை ஏற்படுத்துங்கள்



ஆம், பால் என்பது மன அழுத்தத்திற்கான நச்சு முறிவுப் பொருளாகும். அழுத்தம் ஏற்பட்டால், அது செரடோனின் அளவை குறைக்கும். செரடோனின் என்பது உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் உடம்பில் உள்ள ஒரு ரசாயனமாகும். பாலில் திடமான புரதம் உள்ளதால், அது ட்ரிப்டோபன் அளவை அதிகரிக்கும். ஒரு ஆய்வின் படி, பாலானது செரடோனின் அளவை 43 சதவீதம் வரை அதிகரிக்க உதவி புரியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சர்க்கரை மற்றும் காபியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #2 on: August 13, 2013, 07:34:21 PM »
முன்னேற்றம் காண பசுமையை நாடிடுங்கள்



உங்களுக்கு தேவையானது சாலட். இலை தளைகளால் ஆன அரைக்கீரை மற்றும் இதர கீரைகளில் வைட்டமின் பிஅதிகமாக உள்ளது. இது உங்களை சாந்தமாக வைத்திருக்கும் செரோடோனின், டோபமைன் மற்றும் நொரெபைன்ப்ரைன் போன்றவைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. வைட்டமின் பி6-இன் குறைபாடு, படபடப்பு, எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இப்போது மதிய உணவிற்கு என்ன வேண்டும் என்ற தெளிவு இருக்கிறதா?

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #3 on: August 13, 2013, 07:35:20 PM »
அமைதியாக இருங்கள்;



கைகள் பேசட்டும் வேலைக்காக நேர்க்காணலுக்கு செல்லும் போது கைகளை தொடைகளின் மீது வையுங்கள். முழங்கையை சற்று மடித்து விரல்கள் தொடும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ரிலாக்ஸாக இருக்க, இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் பேசும் போது சரியான உரையாடலை அது ஊக்குவிக்கும். அதன் பின் என்ன, யாராலும் உங்களை தடுக்க முடியாது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #4 on: August 13, 2013, 07:36:34 PM »
கெடுவை அடைய கெண்டைச் சதையை இறுக்கிடுங்கள்



புரிந்ததா? அழுத்தத்திற்கு மூளை குறி கிடையாது, கெண்டைச்சதை தான். மன அழுத்தம் ஏற்படும் போது கெண்டைச் சதையை இறுக்கினால், மன அழுத்தம் குறையும். மேலும் கால்களை நன்றாக இறுக்கினா,ல் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் தெரியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #5 on: August 13, 2013, 07:37:35 PM »
பச்சை புள்ளியின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளுங்கள்


 
உங்களை ஒன்னும் வெஜிடேரியனாக மாற சொல்லவில்லை. ஒரு பச்சை புள்ளியை கைப்பேசியில் ஒட்டிக்கொண்டால், ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் ஆழமாக மூச்சு விட வேண்டும் என்பதற்கான ரகசிய நினைவூட்டியாக அது விளங்கும். இது அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #6 on: August 13, 2013, 07:38:27 PM »
அழுத்தத்தை நீக்க இசை



பிடித்த இசையை வேலைக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை கேளுங்கள். உலகளாவிய ஆய்வின் படி, இசை என்பது வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும். ஏன், அடிக்கடி பிடிக்கும் சளியை கூட நீக்குமாம். என்ன நம்பலையா? நீங்களே சோதித்து பாருங்களேன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #7 on: August 13, 2013, 07:39:16 PM »
கஞ்சி குடித்து ஆற்றலை அதிகரியுங்கள்



ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் கஞ்சியை நிரப்பி உண்ணுங்கள். அது போதிய திறனை அளிக்கும். ஓட்ஸில் கிளைகாமிக் இன்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யாது. அதனால் இயல்பாக இருக்க இது உதவி புரியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #8 on: August 13, 2013, 07:40:06 PM »
ஆரஞ்சு பழங்களை கொண்டு அழுத்தத்தை குறையுங்கள்


 
மன அழுத்தத்தில் இருக்கும் போது வைட்டமின் சி-யின் அளவு குறையும். வைட்டமின் சி-யை அதிகரிக்க சுவை மிக்க ஆரஞ்சு பழங்களை உண்ண கசக்குமா என்ன? உங்களுக்கு வேண்டுமானால் வைட்டமின் சி உள்ள மற்ற உணவுகளையும் கூட உண்ணலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226401
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ மன அழுத்தத்தை நீக்க ~
« Reply #9 on: August 13, 2013, 07:40:55 PM »
நட்ஸ் வகை உணவை தேர்ந்தெடுங்கள்



மன அழுத்தம் உள்ளதென்றால், அது மெக்னீசியத்தின் குறைபாட்டால் கூட இருக்கலாம். சரி அதற்கு தீர்வு? மெக்னீசியம் அதிகம் நிறைந்த பாதாம் போன்ற உணவு வகைகளை உண்ணுங்கள்.