ஆடையின்றி பிறந்த நாம்
ஆசைகள் இன்றி பிறக்கவில்லை
ஆசை இல்லாத வாழ்வு
நிறங்களற்ற வானவில்
ஆசை இல்லாத இதயத்தில்
கனவுகள் இல்லை
கனவுகள் இல்லாத இடத்தில்
முயற்சி இல்லை
முயற்சி இல்லாத மனிதனிடம்
உழைப்பு இல்லை
உழைப்பு இல்லாவிடில்
உலகமே இல்லை
அளவாக ஓடினால்
ஆறு
அளவற்றுப் போனால்
வெள்ளம்
மிதமாக வீசினால்
தென்றல்
மிகையற்று வீசினால்
சூறாவளி
சிறுநெருப்பு அடுப்பை
எரிக்கும்
பெருநெருப்பு ஊரையே
அழிக்கும்
ஆசையும் அப்படியே
எல்லைக்குள் இருந்தால்
எதும் சுகம்
எல்லை மீறினால்
எல்லாம் துன்பம்
ஆசையை துறக்க வேண்டுமா
தேவையில்லை
பேராசையில் இருந்து
விடுபடுவோம்