Author Topic: சாம்ப் மசாலா  (Read 565 times)

Offline kanmani

சாம்ப் மசாலா
« on: August 12, 2013, 10:38:26 PM »
தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)
தக்காளி - 2 (அரைத்தது)
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பட்டை மற்றும் கிராம்பு பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து தீயை குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான சாம்ப் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.