என்னென்ன தேவை?
சாக்லெட் குக்கீஸ் (கிரீமுடன் உள்ளது) - 2,
கிரீம் இல்லாதது - 3,
இன்ஸ்டன்ட் எக்ஸ்பிரஸோ தூள் - (அப்படியே கடைகளில் கிடைக்கிறது) - 1 டீஸ்பூன்,
சாக்லெட் சிரப் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
பால் - 1 கப்,
நன்கு அடித்த கிரீம் - அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
இன்ஸ்டன்ட் எக்ஸ்பிரஸோ தூளுடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். குக்கீஸை பொடித்து வைக்கவும். பால், எக்ஸ்பிரஸோ கலவை, சாக்லெட் சிரப் சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு டம்ளரில் இந்தக் கலவையை விட்டு, மேலே கிரீம் மற்றும் பொடித்த குக்கீஸ் தூவிப் பரிமாறவும்.