கண்கள் இரண்டும் என்னை பார்க்க,,,
அவள் என்மீது கொண்ட அன்பு வெளிவர,,,
விழி ஓரத்தில் என்னுடன் கடந்த நினைவுகளை நான் காண...
அவள் விழியுடன் நான் சந்தித்தேனோ!
உதடுகள் என் பெயர் சொல்ல,,,
சிறு புன்னகையின் ஓரத்தில் என்மீது உள்ள,
நேசம் வெளி வர!
அவள் மூச்சி காற்றின் வெப்பத்தில் என்னை,
நான் உணர!
கைகள் இரண்டும் என்னை இறுக்கி கொள்ள,,
அன்பாய் என் தலை கோத...
மனமது என்றும் அவளுடன் இருந்தும்
எனக்காய் துடிக்க,,,
அவளுடன் இணைந்து காதல் கவிதையை நான் எழுத...
என் அழகு தேவதையின் அன்பில்,,,
அவளை படைத்த அந்த பிரமன்னும் அதிர்ச்சி உற்றானோ!!!