என்னென்ன தேவை?
முழு உளுந்து - 1/4 கிலோ,
அரிசி மாவு - 150 கிராம்,
வனஸ்பதி - பொரிப்பதற்கு,
சோடா உப்பு - சிறிது,
சர்க்கரை - 1/2 கிலோ,
ஃபுட் கலர் - பச்சை,
சிவப்பு, மஞ்சள்.
எப்படிச் செய்வது?
உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவு கைப்பிடி அளவும், சோடா உப்பு ஒரு சிட்டிகையும் மாவில் கலக்கவும். பிறகு மாவை பூந்திக் கரண்டி கொண்டு எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சர்க்கரை பாகு வைத்துக் காய்ச்சிப் பொரித்து வைத்திருக்கும் பூந்திகளைப் போட்டு ஊற விட்டு எடுத்து வைக்கவும்.
குறிப்பு: சர்க்கரைப் பாகை மூன்று பாகமாகப் பிரித்து, மூன்று கலரையும் தனித் தனியாகச் சேர்த்து ஊறவிடவும். பிறகு மூன்று கலரையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.