Author Topic: ~ உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் ~  (Read 2796 times)

Online MysteRy

உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்

சமதள சாலைகள், மலைப்பாங்கான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் போன்றவை நமக்கு பரிட்சயம். ஆனால், உலகின் சில சாலைகளும், பாலங்களும் வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்ததாக உள்ளன. வண்டியை எடுத்தோமா, போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தோமா என்றிருக்கும் நமக்கு இந்த சாலைகள் நிச்சயம் புதுமையாகவே தோன்றும்.

அதிலும், படத்தில் காணும் சில சாலைகள் புதுமையான அனுபவத்தையும், சில சாலைகள் த்ரில்லை தரும் விதத்திலும் இருக்கின்றன. அதுபோன்று, ஆயுளில் ஒருமுறையாவது இந்த சாலையில் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் சில பாலங்கள் மற்றும் சாலைகளின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.



உலகின் உயரமான பாலம்



உலகின் மிக உயரமான பாலம் பிரான்ஸ் நாட்டில் ஓடும் டார்ன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து 1,125 அடி உயரம் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Online MysteRy

அட்லான்டிக் பாலம்



நார்வே நாட்டில் அட்லாண்டிக் கடல்பகுதியில் இருக்கும் தீவுகளை இணைக்கும் விதத்தில் ஏராளமான கடல் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில், ஒன்றைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். அங்கு சூறாவளி அடிக்கடி வீசுவது வாடிக்கை. அப்படியொரு, சூறாவளியின்போது ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் பாலத்தை முட்டி மோதும் போது டிரக் ஒன்று கடப்பதை படத்தில் காணலாம். அடிக்கடி சூறாவளி ஏற்படுவதால் பாலத்தை உயர்த்தி கட்டி இருப்பதை படத்தில் காணலாம்

Online MysteRy

உலகின் நீளமான பாலம்



சீனாவின் டான்யாங்-குன்ஷன் கிராண்ட் பாலம்தான் உலகின் நீளமான பாலம். 164.8 கிமீ., நீளம் கொண்டது.

Online MysteRy

மற்றுமோர் உயரமான பாலம்



சீனாவில் சிது ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலம் ஆற்றின் கீழிறிருந்து 1,600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 1,222 மீட்டர் நீளம் கொண்டது.

Online MysteRy

மற்றுமோர் அதிசயம்



மும்பையில் பந்த்ரா-வோர்லியை இணைக்கும் கடல்வழிப் பாலமும் உலகின் விந்தையான பாலங்களில் ஒன்றுதான். 5.6 கிமீ., நீளம் கொண்ட இந்த பாலம் அழகாக வடிவமைக்கப்பட்ட பாலமும் கூட. பாலத்தின் அழகை படத்தில் கண்டு ரசியுங்கள். முடிந்தால் மும்பைக்கு செல்லும்போது இந்த பாலத்தை காணத் தவறாதீர்.

Online MysteRy

தேஸ்பூர் பாலம்



அசாம் மாநிலம், தேஸ்பூரில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த பாலம் 3.15கிமீ நீளம் கொண்டது. விளக்கொளியில் ஜொலிக்கும் இந்த பாலத்தை படத்தில் காணலாம்.

Online MysteRy

சீன விந்தை



சீனாவின்ஹுனான் மாகாணத்தில் மலை உச்சியில் இருக்கும் டியான்மென் குகைக்குச் செல்லும் இந்த சாலை 99 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. 11 கிமீ நீளம் கொண்ட இந்த சாலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்த ஒன்று.

Online MysteRy

ஆள் ஆரவமற்ற நெடுஞ்சாலை



அமெரிக்காவின் மேற்கையும், கிழக்கு கடற்கரைப் பகுதியையும் இணைக்கும் நெடுஞ்சாலை எண் 50 ஆள் ஆரவமற்ற சாலையாக குறிப்பிடப்படுகிறது. அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்துள்ள மேரிலாண்ட் நகரில் துவங்கும் இந்த சாலை பசிபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சாக்ரமென்ட்டோ நகரை இணைக்கிறது. 4,800 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையின் இடையில் 657.93 கிமீ தூரத்துக்கு நெவடா பகுதி கடக்கிறது. இதுவே ஆள்ஆரவமற்ற சாலையாக குறிப்பிடப்படுகிறது. நெவடா பகுதியில்தான் கார் மற்றும் பைக்குகளில் அதிவேக சாதனைகள் மற்றும் சோதனைகள் செய்யப்படுகிறது.

Online MysteRy

சூப்பர் வே இன் நார்வே



நார்வேயிலுள்ள ட்ரோல்ஸ்டிகன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடம். அங்கு பசுமை கொஞ்சும் எழில் சூழல் மலை உச்சியிலிருந்து மெல்ல இறங்கி வரும் இந்த சாலையில் செல்வதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். மலை உச்சியில் ஸ்டிக்ஃபாஸன் நீர் வீழ்ச்சியின் அருகிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

Online MysteRy

இப்பவே கண்ணே கட்டுதே



இந்த பாலத்தை பார்த்தவுடன் இப்பவே கண்ணை கட்டுதே சொல்ல தோன்றுகிறதா. டெக்சாஸ் மாகாணம், ஹஸ்டன் ஸ்பாக்ஹெட்டி பவுல் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். நமக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், முதன்முதலாக இந்த சாலையில் செல்வோர்க்கு கொஞ்சம் தலையை பிய்த்துக் கொண்டுதான் கரை சேர்ந்திருப்பர்.

Online MysteRy

எரிமலை சாலை



மொராக்கோவின் அட்லஸ் மலையிலிருக்கும் டேட்ஸ் என்ற சுற்றுலா தலத்திற்கு செல்லும் வழிதான் இது. அப்படி என்ன இதில் சிறப்பு என்கிறீர்களா. இது எரிமலையில் அமைக்கப்பட்டிருக்கும் சாலை. ஆஃப் ரோடு டிரைவிங் செய்யவும் ஏற்ற இடமாம்.

Online MysteRy

வளைகுடாவின் வளைவு சாலை



ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் இந்த சாலை டிரைவிங் செய்வதற்கு உலகின் சிறந்த சாலையாக குறிப்பிடப்படுகிறது. ஒரு ஓட்டலின் பார்க்கிங் வளாகத்தை இணைக்கும் சாலைதான் இது. பாலிவுட் படமான ரேஸ் சினிமாவில் இந்த சாலையில் வைத்து சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

Online MysteRy

ரோமானியா ஹைவே



1970ம் ஆண்டுகளில் கார்பாதியன் மலைச்சுகரத்தை ரோமானிய துருப்புகள் எளிதாக அடையும் வகையில் அமைக்கப்பட்ட சாலை இது. தற்போது டிரைவிங் செய்வதற்கு ஏற்ற சாலையாக வர்ணிக்கப்படுகிறது. பார்முலா-1 ரேஸிங் சர்க்யூட் போன்று காட்சியளிக்கும் இந்த சாலையை படத்தில் காணலாம்.

Online MysteRy

பொலிவிழந்த பொலிவிய சாலை



என்னடா இந்த ரோட்டை எதற்காக போட்டிருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா. விஷயம் இருக்கிறது. 2009ம் ஆண்டு வரை பனிக் கட்டிகளால் சூழப்பட்ட பொலிவியா நாட்டிலுள்ள சகல்டயா மலைதான் இது. புவி வெப்பமயமாதலால் இந்த மலையிலிருந்து பனிக்கட்டிகள் எல்லாம் உருகிவிட்டது. தற்போது குளிர்காலத்தில் மட்டும் பனி படர்கிறது. பொலிவியாவின் பொலிவிழந்த இந்த மலையில் உள்ள ரெசார்ட் ஒன்றிற்கு செல்லும் சாலைதான் இது.

Online MysteRy

இத்தாலி அழகி



இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் 2757 மீட்டர் உயரத்தில் இருக்கும் இரண்டாவது உயரமான ஸ்டெல்வியோ கணவாய் பகுதிக்கு செல்லும் சாலை இது. 60 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலையை டிரைவிங் செய்வதற்கு ஏற்ற உலகின் சிறந்த சாலைகளுல் ஒன்றாக டாப் கியர் ஆட்டோமொபைல் இதழ் தெரிவித்துள்ளது.