உன் வாழும் காலத்தில்
உனதருமை
தெரியவில்லை
எனக்கு
நீ காட்டிய
பாசங்கள்
கண்டிப்புகள்
அறிவுரைகள்
எதுவுமே
எனக்கு
பெரிதாய்
படவில்லை
அன்று
என் கண்கள்
முன் நீ நடமாடிக்கொண்டிருந்த போது
இன்று தவிக்கிறது நெஞ்சம்
ஏங்குகிறது மனது
தேடுகிறது கண்கள்
உன் வார்த்தைகள்
என் காதில் விழாதா?
உன் பாசங்கள்
எனக்கு கிடைக்காதா?
இன்னும்
இன்னும்
இன்னும்
சொல்ல இயலாமல் விம்மி அழுகிறது என் மனது............எங்கே சென்றாய் என்னை மட்டும் விட்டுவிட்டு........................