Author Topic: என் உயிரே  (Read 486 times)

Arul

  • Guest
என் உயிரே
« on: August 10, 2013, 08:57:12 AM »
உள்ளம் என்னும் ஓடையிலே
பயணம் செய்ய வந்தவளே
உன் பயணம் நீண்டு செல்ல
என் உள்ளம் ஆசைப்பட
நீ என் உள்ளத்திலே குடியிருக்க
நடு வழியில் நிறுத்திவிட்டாய்
அப்போது சுழன்று வந்த
சுழல் காற்று உன் படகை
கவிழ்க்க முயல இறைவா என்றழைக்காமல்
என் உயிரே என்று எனை அழைத்தாய்
அந்நேரம் உன்கரம் பிடித்தேன்
இன்று வரை நீ
என்னோடு
என் உயிரே
நான் என்றும்
உன்னோடு............
[/size][/color][/color]