Author Topic: பேரிச்சம் பழ அல்வா  (Read 555 times)

Offline kanmani

பேரிச்சம் பழ அல்வா
« on: August 09, 2013, 10:47:12 PM »
தேவையான பொருட்கள்:

பேரிச்சம் பழம் - 2 கப் (விதை இல்லாதது)
சூடான பால் - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
பாதாம் - 5-6 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சூடான பாலில் பேரிச்சம் பழத்தை போட்டு, 3 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தட்டில், 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தைப் போட்டு, சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அத்துடன் இன்னும் சிறிது பால் சேர்த்து, 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, குளிர வைத்து, துண்டுகளாக்கி பரிமாறினால், சுவையான பேரிச்சம் பழ அல்வா ரெடி!!!