பூண்டு - ஒரு கப்
வரமிளகாய் - 10 (அ) காரத்திற்கேற்ப
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
பின்பு பாதி கறிவேப்பிலையை பொரித்துக் கொள்ளவும். மீதியை தனியாக எடுத்து வைக்கவும்.
தக்காளியை எண்ணெயில் போட்டு தோல் பிரியும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பூண்டை பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவிடவும். ஆறியதும் உப்பு, மீதமுள்ள கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். விரும்பினால் சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான பூண்டு சட்னி தயார். கறிவேப்பிலை தோசைக்கு செய்து அசத்துங்கள்.