Author Topic: தக்காளி பன்ச்  (Read 540 times)

Offline kanmani

தக்காளி பன்ச்
« on: August 08, 2013, 10:25:57 PM »
என்னென்ன தேவை?

தக்காளி - கால் கிலோ,
துளசி இலைகள் - 10,
உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள்,
சாட் மசாலா - தலா 1 சிட்டிகை,
பனங்கல்கண்டு தூள் - 1 டீஸ்பூன்,
தேன் - 2 டேபிள்ஸ்பூன்,
ஐஸ் கட்டிகள் - சிறிது.

எப்படிச் செய்வது?

தக்காளியுடன் துளசி சேர்த்து அரைத்து வடிகட்டவும். அத்துடன் உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள், சாட் மசாலா, பனங்கல்கண்டு தூள், தேன் சேர்த்துக்  கலக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.