Author Topic: திருநெல்வேலி சொதி  (Read 671 times)

Offline kanmani

திருநெல்வேலி சொதி
« on: August 07, 2013, 10:25:29 PM »
என்னென்ன தேவை?

தேங்காய் - 1, கேரட்,
பீன்ஸ், பட்டாணி, முருங்கை - எல்லாம் சேர்த்து 1/4 கிலோ,
உருளைக் கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 4,
எலுமிச்சைப்பழம் - 1/2 மூடி,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பூண்டு - 6 பல்,
கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு,
எண்ணெய் - தாளிப்பதற்கு, உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது? 

தேங்காயைத் துருவி 3 வித பால் எடுக்கவும். உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி, முருங்கை எல்லாவற்றையும் நறுக்கி, 3வது பாலில்  வேகவிடவும். காய் வெந்தவுடன் 2வது பால் ஊற்றி, சின்ன வெங்காயம், பூண்டை வதக்கிப் போடவும். அதில் பச்சை மிளகாய் அரைத்துப் போட்டு,  உப்பு சேர்த்து, முதல் தேங்காய் பால் ஊற்றி இறக்கி எலுமிச்சைச்சாறு பிழியவும். கடைசியாக கடுகு, உளுந்து, சீரகம் தாளித்துக் கொட்டவும்.