Author Topic: மலாய் ஜிலேபி  (Read 731 times)

Offline kanmani

மலாய் ஜிலேபி
« on: August 07, 2013, 10:25:00 PM »
என்னென்ன தேவை?

மைதா மாவு - 2 கப்,
ப.அரிசி மாவு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை - 2 (அ) 3 கப் (மலாய் ஜிலேபி என்பதால் சர்க்கரையை தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன்,
ரீஃபைண்ட் ஆயில் - தேவைக்கேற்ப,
பேகிங் பவுடர் - கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

மைதா மாவுடன் அரிசி மாவு, மஞ்சள் ஃபுட் கலர் தயிர், சிறிது தண்ணீரில் கரைத்த பேக்கிங் பவுடர் சேர்த்து வடை மாவு பதத்தில்  கரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை 2 மணி நேரம் புளிக்க விட்டு ஜாங்கிரி பிழியும் துணியில் கொஞ்சம் கொஞ்சமாக மாவைப்போட்டு சூடான  எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும். பின் சர்க்கரையை கம்பி பாகு பதத்தில் காய்ச்சி அதில் ஜிலேபிகளைப் போட்டு, உடனே எடுத்து ஒரு  ட்ரேயில் வைத்து அதன் மேல் மலாய், பிஸ்தா சீவல் அல்லது பாதாம் சீவல் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: ஜிலேபி செய்ய ஒரு சுத்தமான துணியின் மத்தியில் ஒரு மிளகு அளவு ஓட்டைப் போட்டு அதில் மாவு போட்டும் செய்யலாம். கீர் செய்ய...  பாலை சுண்ட காய்ச்சி சிறிது சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். பால் ஏடை சேர்த்தும் க்ரீம் செய்யலாம். கடையிலும் கீர் கிடைக்கிறது.