Author Topic: பான்டன் கடல் பாசி  (Read 645 times)

Offline kanmani

பான்டன் கடல் பாசி
« on: August 06, 2013, 04:44:42 PM »

    கடல் பாசி - ஒரு கைப்பிடியளவு
    பான்டன் இலை - ஒரு கைப்பிடியளவு
    சீனி - ஒரு டம்ளர்
    தேங்காய் பால் - ஒரு குவளை
    உப்பு - சிறிது

 

 
   

பான்டன் இலையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
   

இலையுடன் தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைக்கவும்.
   

பாத்திரத்தில் 3 குவளை தண்ணீர் ஊற்றி கடல் பாசியைப் போட்டு கொதிக்கவிடவும். கடல் பாசி நன்றாக கரைந்ததும் உப்பு மற்றும் சீனி போடவும்.
   

அதனுடன் வடிகட்டி வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றவும்.
   

கலவை கொதிக்க ஆரம்பிக்கும் முன் அடுப்பை அணைக்கவும்.
   

இப்போது கடல் பாசி கலவையை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
   

பின்னர் அதை விரும்பிய அச்சுக்களில் ஊற்றி, நன்றாக ஆறியதும் 2 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து பரிமாறவும்.