Author Topic: வம்காய அன்னம்  (Read 480 times)

Offline kanmani

வம்காய அன்னம்
« on: August 06, 2013, 04:40:58 PM »
எப்படி செய்வது?

பிஞ்சு கத்தரிக்காய் - 300 கிராம்
அரிசி - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 200 மில்லி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு.
என்னென்ன தேவை?

அரிசியை குழைந்து விடாமல் சாதமாக வடித்துக் கொள்ளுங்கள். கத்தரிக்காயை நீளவாக்கில் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயம்,  கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.  கடலைப்பருப்பு, உளுந்து, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து  அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், கத்தரிக்காயைப்  போட்டு வதக்குங்கள். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு கிளறி ஐந்து நிமிடம் மூடிவைத்து கிளறி  இறக்குங்கள். இந்த கலவையில், சாதத்தையும் அரைத்து வைத்துள்ள கலவையையும் சிறிது, சிறிதாகப் போட்டு கிளறுங்கள். இதில் மீதமிருக்கும்  எண்ணெயை ஊற்றி கொத்தமல்லியைத் தூவுங்கள். ஆந்திர தேசத்து வம்காய அன்னம் ரெடி.