Author Topic: ~ கோரை புல்லின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 798 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோரை புல்லின் மருத்துவ குணங்கள்:-




மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்

* கோரைக் கிழங்கு மாம்பட்டை ஆகிய இரண்டையும், இடித்துப் பொடியாக்கிப் பிட்டு செய்து, அதை நன்கு பிழிந்தெடுத்த சாற்றில் அதிடயம், இலவம் பிசின் இவற்றைச் சேர்த்து தக்க அளவில் உட்கொண்டால் கழிச்சல் ஜுரம் தீரும்.

* இதன் குடிநீரை பேதி, குன்மம், வாந்தி முதலியவற்றிற்குத் தரலாம்.

* இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டரைத்து ஒரு சிறு சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி போகும்.

* பச்சைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றாகப் போட்டால் பால் சுரக்கும் தேள் கடிபட்ட இடத்திலும் பற்றிடலாம். உடல் மீது பூசி வந்தால் வியர்வை நாற்றம் போகும்.

* கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், திரிபலை, திராட்சை, வேம்பு, வெட்பாலை இவைகளை வகைக்கு கொஞ்சம் எடுத்து முறையாக குடிநீர் செய்து சாப்பிட்டால் சுரம் நீங்கும்.

* கோரைக்கிழங்கு முழுகுநீர் கோரைக்கிழங்கு, திரிபலை, மருக்காரை, புங்கு, கொன்றை, வாலுளுவை, வாற்கோதுமை, ஏழிலைப் பாலை, கோட்டம், ஞாழல், மரமஞ்சள், வெண்கடுகு இவற்றை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பெருநோய், சொறி, வீக்கம், பாண்டு தீரும்.

* கோரைக்கிழங்கு, சீந்தில், மரமஞ்சள், அன்னபேதி, கோண்டம், வெள்ளிளலோத்திரம், கந்தகம், சாம்பிராணி, வாய்விடங்கம், மனோசிலை, தாளசம், அலசிப்பட்டை இவற்றைப் பொடித்து, உடலில் எண்ணெய் தடவி, அதன்பின் மேற்படி பொடியைத் தேய்க்க, சருமப்படை, சிரங்கு நீங்கும்.

* கோரைப்பாய் இது சிறிய, பெரிய கோரைக்களால் செய்யப்படுகிறது. இதில் படுத்து வந்தால் பசி, மந்தம், காய்ச்சல் வேகம் நீங்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், தூக்கம் உண்டாகும்

* கோரை கிழங்கை காய வைத்து சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை , தினம் இரு வேளை பாலில் உண்டு வர உடல் பருக்கும். மேலும் இந்த சூரணத்தை உடம்பில் தேய்த்து குளிக்க உடம்பில் உள்ள துர் நாற்றம் , கத்தாளை நாற்றம் ஆகியவை தீரும். கோரை கிழங்கு சூரணம் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். எவ்விதமான பத்தியமும் கிடையாது.கோரை புற்களை வேர் வரை தோண்டினால் கிடைக்கும் கிழங்கே கோரை கிழங்கு ஆகும்

* கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குறையும்.