Author Topic: நல்லெண்ணெய் வத்தக் குழம்பு  (Read 497 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

சின்னவெங்காயம் - சிறிது,
பூண்டு - 10 பல்,
மணத்தக்காளி வற்றல் - 2 டீஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலைப் பொடி (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை வறுத்துத்  தனியே வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பிறகு அதில் இன்னும் சிறிது சின்ன வெங்காயம், ஸ்லைஸ் செய்த  பூண்டு சேர்த்து, சிவக்க வதக்கவும். வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்க்கவும். புளியைக் கரைத்து, அதில் மஞ்சள் தூள், தனியா தூள்,  மிளகாய் தூள், கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கெட்டியாகக் கரைத்து வைக்கவும். அதை கடாயில் வதங்கிக் கொண்டிருக்கும் கலவையில் கொட்டவும்.  கல் உப்பு சேர்த்து நன்கு கொதி வரும் போது, 2 டீஸ்பூன் நல்லெண்ணெயை அப்படியே அதன் மேலே விடவும். ஃப்ரெஷ்ஷான கறிவேப்பிலையை  அதில் போட, அந்தச் சூட்டிலேயே கறிவேப்பிலை வெந்துவிடும்.