Author Topic: ~ இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள் ~  (Read 1052 times)

Online MysteRy

இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள்

ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது. சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள். இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன. இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல. ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.

அதிலும் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால், அப்போது நேரத்தை செலவழிப்பது என்பது கடினமாகிவிடும். அந்நேரம் எப்படி நேரத்தை செலவழிப்பது என்று புரியாமல் பரிதவிப்போம். விடுமுறை நாட்கள் அனைத்தையும் வீட்டு அறையிலேயே கழிப்பது சலிப்பான மற்றும் வெறுப்பான காரியம் தான். ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி. ஆகவே நல்ல பொழுதுபோக்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இளம் பெண்களுக்கான சில பொதுவான மற்றும் அவசியமான பொழுதுபோக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் ஈடுபட்டு நேரத்தை சந்தோஷமாக கழியுங்கள்.



சமையல்



இது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை, உயிர் பிழைப்பதற்கான முக்கியமான தேவையும் கூட. உணவுக்காக பிறரை எதிர்பார்த்து எல்லா தருணங்களிலும் நம்மால் இருக்க முடியாது. ருசிக்காக இல்லாவிடிலும் பசிக்காக சமைக்க கற்றுக் கொள்ளலாம்.

Online MysteRy

நடனம்



விருப்பமான நடனத்தை கற்றுக் கொள்ளலாம். சால்சா முதல் ஜாஸ் வரை தேர்வு செய்ய பல தரப்பட்ட நடன வகைகள் உள்ளன. அது பார்க்க அழகாக இருக்கும் என்று மட்டும் சொல்வதற்கு இல்லை அது ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட.

Online MysteRy

படித்தல்



சிறுகதைகள், காதல் நாவல் அல்லது ஆர்வத்தை தூண்டும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். இதனால் நிச்சயம் நேரம் போவதே தெரியாமல் இருக்கும்.

Online MysteRy

ஆடை அலங்காரம்



சில பெண்களுக்கு எம்பிராய்டரி செய்ய நேரம் கிடைக்கின்றது, அவர்கள் ஏதாவது புதிய முயற்சி எடுக்கலாம். இக்கலையை கற்பதன் மூலம், நாமே ஆடை வடிவமைப்பாளர் ஆகலாம்.

Online MysteRy

எழுதுதல்



தூங்கும் முன்பு அன்றாட நடவடிக்கைகளை எழுதலாம். நாட்குறிப்பு எழுதுவதில் நாட்டம் இல்லையெனில் ஏதேனும் விருப்பமுள்ள தலைப்பில் எழுத ஆரம்பிக்கலாம். இந்த வழியில் நல்ல எழுத்து திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். யாருக்கு தெரியும் இதனால் அடுத்த கவிஞர் வைரமுத்தாக ஆகக் கூட மாறலாம்.

Online MysteRy

போட்டோ



நொடிப்பொழுதில் நிகழும் தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்து நினைவு கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்தல் மிகவும் எளிதாக உள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் கூட ஒரு நல்ல படத்தை பதிவும் செய்யலாம்.

Online MysteRy

பாடல்



குரல் திறமைகளை நன்கு வளர்த்துக் கொள்ளலாம். அதிலும் மனதிற்கு பிடித்த பாடலை முனுமுனுத்துக் கொண்டே இருந்தால், நேரம் போவதே தெரியாது.

Online MysteRy

இசைக்கருவிகள்



வாசித்தல் கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை. விருப்பமான இசைக்கருவியை தேர்வு செய்து கற்றுக் கொள்வது ஒரு சிறந்த பொழுதுபோக்காகும்.

Online MysteRy

சேவைகள்



விலங்குகள் பிடிக்கும் என்பவர்கள், விலங்குகளுக்கான தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யலாம். ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் அரசு சாரா நிறுவனத்தில் சேர்ந்து தொண்டு செய்வது ஒரு நல்ல பொழுதுபோக்கு மட்டுமின்றி, பொது நல சேவையாகவும் இருக்கும்.

Online MysteRy

நட்பு கொள்ளுதல்



நண்பர்களுடன் சுற்றுலா செல்வது அல்லது திரைப்படங்களுக்கு செல்வதை விட மகிழ்ச்சிகரமான தருணம் வேறு எதுவாக இருக்க முடியும். இதன் மூலம் கிடைப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, துன்பம் ஏற்படும் போது பகிர்ந்து கொள்ள நல்ல நட்பும் தான்.