ப்ரவுன் ப்ரெட் - 8
முட்டை - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 5 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
ஸ்வீட் கார்ன் - 5 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
சாட் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஸ்வீட் கார்னை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். ஸ்வீட் கார்னுடன் சில்லி ஃப்ளேக்ஸ், வெள்ளை மிளகுத் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டு முட்டை உதிரியாக வந்ததும் இறக்கிவிடவும்.
2 ப்ரவுன் ப்ரெட்டை எடுத்து பட்டர் தடவிக் கொள்ளவும். ஒரு ப்ரெட்டில் அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் கலவையையும், மற்றொரு ப்ரெட்டில் முட்டை கலவையையும் வைத்து மூடவும்.
தவாவை சூடாக்கி எண்ணெய் விட்டு அதில் பிரட்டை வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும். டேஸ்டி எக் கார்ன் சாண்ட்விச் தயார்.
முட்டைக்கு பதிலாக எலும்பில்லாத சிக்கன் துண்டுகளில் தொக்கு செய்தும் ப்ரெட்டில் வைக்கலாம்.