என்னென்ன தேவை?
மொச்சை - 100 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
தேங்காய் - 1 மூடி,
சோம்பு, லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, பூண்டு பல் - 5,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை வதக்கி அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். தேங்காய்பால் எடுத்துக் கொள்ளவும். சோம்பு, லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை வதக்கவும். தக்காளி-வெங்காயம் அரைத்த விழுதைச் சேர்க்கவும். பச்சை மிளகாயைக் கீறிப் போடவும். பிறகு, வேகவைத்த மொச்சையை போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து, கொதித்தவுடன் மிளகாய் தூள் சேர்த்து, தேங்காய்பால் விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.