Author Topic: ~ கர்ப்பிணிகளுக்கான பயனுள்ள தகவல்கள் ~  (Read 938 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கர்ப்பிணிகளுக்கான பயனுள்ள தகவல்கள்

ஒரு பெண்ணின் உள்ளே ஒரு குழந்தை வளர்ந்து வந்து, அதை ஈன்றெடுக்கும் நிலை தான் கர்ப்பம் எனப்படும். குழந்தை உருவாகின்ற இந்த நிலை ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும்.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள் தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இந்த நேரத்தில் தான் கருச்சிதைவுக்கான‌ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் அதிகபட்ச ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் போது பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதால், அவை மிக கடினமான மாதங்கள் ஆகின்றன.

இப்போது கர்ப்பம் பற்றிய பயனுள்ள சில முக்கியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து பார்த்து, அதனை பின்பற்றி, நல்ல படியாக குழந்தையை பெற்றெடுங்கள்.



உணவுப் பழக்கம்


 
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிலும் உட்கொள்ளும் சரியான ஊட்டச்சத்தும் மிகவும் முக்கியம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடுகிறாளோ அதுதான் குழந்தைக்கும் செல்லும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடற்பயிற்சி



கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உள்ளன. அதுவும் முதல் மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் எடை அதிகரிப்பதைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது



ஒரு கர்ப்பிணிப் பெண் புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது. இந்த இர‌ண்டும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானவை. ஒரு கர்ப்பிணிப் பெண் உட்கொள்ளும் மது குழந்தைக்கு செல்கிறது. அது குழந்தைக்கு கடுமையான சேதம் விளைவிக்கும். குறிப்பாக இதனால் குழந்தைக்குப் பிறப்பிலேயே குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே நன்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அனுபவத்தை கேட்பது



சம வயது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெற்றோர்களாக யாராவது இருந்தால், அவர்களின் அனுபவங்களை பற்றி அவர்களுடன் பேசவும். இதனால் தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மருந்துகள் எடுத்து கொள்ள கூடாது



பொதுவாக கர்ப்பிணிகளுக்கு குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை இருப்பது இயற்கை. இதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது. அதற்கு பதிலாக இயற்கை தீர்வு பெற‌ முயற்சிக்க வேண்டும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிறைய தண்ணீர் குடிக்கவும்



அதிக நீர் உட்கொள்வது முக்கியம். தினமும் குறைந்தது ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீச்சல் செய்யவும்



கர்ப்பக் காலத்தில் வலிகள் நிறைய இருப்பதால், நீச்சல் உகந்த‌து. ஏனெனில் நீச்சல் செய்வதால் வலியின்றி இருப்பதோடு, உடல் பாரமும் தெரியாமல் இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காரமான அல்லது வறுத்த உணவு தவிர்க்கவும்


 
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் இருந்தால், வறுத்த மற்றும் காரமான உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உயர்த்தப்பட்ட தலையணைகள் வைத்துத் தூங்கவும்



ஒரு கர்ப்பிணிப் பெண் சற்றே உயர்ந்த தலையணைகள் வைத்துத் தூங்க வேண்டும். அதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு எனக் கிடைக்கும் சிறப்பு மெத்தை வாங்க முடியும் என்றால் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், இரண்டு தலையணைகள் வைத்து உயர்வான நிலையில் தூங்குவது மிகவும் வசதியாக இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
போட்டோ



போட்டோக்கள் சிறந்த நினைவுச் சின்னங்கள் ஆகும். ஆகவே கர்ப்ப காலத்தில் பல படங்கள் எடுத்துப் பின்னர் அவற்றை ஆல்பம் போன்று செய்து நினைவாக வைத்து, எதிர்காலத்தில் பார்த்து மகிழலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நல்ல புத்தகங்கள் படிக்கவும்



ஒரு கர்ப்பிணிப் பெண் நல்ல நேர்மறையான புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதிலும் புத்தகங்கள் நிறைய படிக்கும் பழக்கம் இருந்தால், கர்ப்ப காலத்தில் சோகமானப் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, பிரசவம் மற்றும் குழந்தைகள் பற்றிய‌ புத்தகங்களை வாசிக்கவும். இல்லையெனில் கர்ப்பம் பற்றிய பல்வேறு புத்தகங்களை படிக்கலாம். இதனால் தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பெற்றோருடன் பேசவும்



பெற்றோர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்கள் உங்களுக்குத் தெரியாத பல‌ விஷயங்களை சொல்வர். அவர்கள் பல கதைகளைப் பற்றிச் சொல்வார்கள். அவர்கள் நீங்கள் குழந்தையாக‌ எப்படி இருந்தீர்கள் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் இருந்துக் கேட்டுக் கற்கவும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தொற்றுநோய் பெறுவதன் வாய்ப்பு அதிகம். இது இன்னும் பலவீனமாக உணர வைக்கும். அதனால், சுற்று வட்டாரத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்து, கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியாகக் களிக்கவும்.