தேவையான பொருட்கள்:
பிரட் - 12
ரவை - 6 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் 2 நிமிடம் ஊற வைத்து, நீரை பிழிந்துவிட வேண்டும்.
பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, ரவை, உப்பு, அரிசி மாவு மற்றும் தயிர் ஊற்றி நன்கு அடித்து, அந்த மாவை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதனை பௌலில் உள்ள மாவில் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதனை ஈரத் துணியால் துடைத்து விட்டு, மாவை தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான பிரட் தோசை ரெடி!!!