Author Topic: இறால் குருமா  (Read 611 times)

Offline kanmani

இறால் குருமா
« on: July 25, 2013, 12:25:07 PM »

    சுத்தம் செய்த இறால் - அரை கிலோ
    நறுக்கிய பீர்க்கங்காய் - அரை கப்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    கொத்தமல்லித் தழை - சிறிது
    உப்பு - தேவைக்கேற்ப
    அரைக்க:
    சோம்பு, கசகசா - 2 தேக்கரண்டி
    தேங்காய் - 2 துண்டுகள்
    தாளிக்க:
    பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை
    எண்ணெய்

 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   

பின்பு தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
   

வதங்கியதும் பீர்க்கங்காய் மற்றும் இறாலைச் சேர்த்து பிரட்டிவிடவும்.
   

பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
   

அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
   

நன்கு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
   

சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
   

சுவையான இறால் குருமா தயார்.