Author Topic: நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது  (Read 1180 times)

Offline kanmani

நம் பூமியில் கிடைக்கும் தங்கமானது ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர். 2 பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.